படக்கம்பெனிகளுக்கு படையெடுப்பு…

57

தலைவன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், கரையோரம், 7 நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல்.

படு கவர்ச்சியாக நடிக்கத்தயாராக இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தும் ஏனோ இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

நிகிஷா பட்டேலும் சளைக்காமல் தன்னுடைய கவர்ச்சிப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார். தன்னுடைய பி.ஆர்.ஓ. மூலம் தொடர்ச்சியாக கவர்ச்சிப்படங்களை மீடியாக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்பு கேட்டு வந்தார்.

இந்நிலையில் சரண் இப்போது இயக்கி வரும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’. படத்தில் ஆரவின் காதலியாக நடிக்கும் வாய்ப்பு நிகிஷாவுக்கு கிடைத்துள்ளது.

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உட்பட பல படங்களை இயக்கிய சரண் இப்போது இயக்கி வரும் படம் இது.

ஆரவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில், அறிமுகநாயகி காவ்யா தாப்பர் கதாநாயகியாக நடிக்கிறார்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில் இந்த படத்தில் நிகிஷா பாட்டேலும் இணைந்துள்ளார்.

இந்தப்படம் தவிர ஜி.வி.பிரகாஷை வைத்து எழில் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் நிகிஷா பட்டேல்.