நடிகை அருந்ததியை பனியன் மட்டும் அணியச் சொல்லி அடம்பிடித்த இயக்குநர்!

969

‘அம்முவாகிய நான்’ படத்தை இயக்கிய பத்மா மகன், நீண்ட இடைவெளிக்கு பிறகு ”நேற்று இன்று” என்ற படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார்.

விமல், பிரசன்னா, ரிச்சர்ட், அருந்ததி, நந்தகி ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்காப்பி முடிவடைந்து பல மாதங்கள் கடந்தநிலையில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

ஏன் இத்தனை தாமதம்?

நேற்று இன்று படத்தில் அருந்ததி ஐந்து அதிரடிப்படை வீரர்களுடன் காட்டுக்குள் செல்லும் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார்.

அவர் நடித்த சில காட்சிகள் கிளுகிளுப்பாக இருந்திருக்கின்றன. எனவே நேற்று இன்று படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டது.

அதனால் வரிவிலக்கு கிடைக்காது என்பதால் யாரும் நேற்று இன்று படத்தை வாங்க முன்வரவில்லை.

இப்போது பத்மா மகனின் நண்பர் எஸ்.தணிகவேல் என்பவர் படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

நேற்று இன்று படத்தைப் பற்றி பத்மாமகனிடம் பேசியபோது…

“இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே இதற்கு ஏ சான்றிதழ்தான் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். காரணம் படத்தில் ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. கண்ணை உறுத்தாத கிளாமர் இருக்கிறது. ஏ சான்றிதழ் பெற்றிருப்பதாலேயே படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்று யாரும் வாங்க முன்வரவில்லை. ஒரு சில கார்பரேட் கம்பெனிகள் அடிமாட்டு ரேட்டுக்கு படத்தை கேட்கிறார்கள். இதனால்தான் படம் தாமதமானது. இப்போது நண்பரின் உதவியால் படத்தை ரிலீஸ் செய்கிறேன்.”

என்ற பத்மா மகன், ”ஏ சான்றிதழ் பெற்றிருப்பதால் இந்தப் படத்தை ஷகிலா படம் ரேன்ஞ்சுக்குத்தான் பார்க்கிறார்கள் என்பதை பார்த்தபோதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.” என்றும் வருத்தப்பட்டார்.

இப்படி வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் பத்மா மகன், அருந்ததி பனியன்தான் அணிய வேண்டும் என்று அடம் பிடித்தது என்?

”கதை அப்படி டிமாண்ட் பண்ணியதால்தான் அப்படி நடிக்க வைத்தேன். நான் இப்படி சொல்வது ஒருவேளை உங்களுக்கு வேடிக்கையாக தோன்றலாம். நேற்று இன்று படத்தைப் பார்த்த பிறகு நான் சொல்வது எத்தனை உண்மையானது என்று உங்களுக்குப் புரியும்” என்றார்.

படத்தைப் பாக்கத்தானே போறோம்…