போனி கபூர் ஆஃபரை அஜித் ஏற்பாரா?

55

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடக்கும் ஸ்டுடியோவுக்கு அண்மையில் விசிட் அடித்த போனிகபூர் படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறார்.

அவருக்கு மிகவும் பிடித்துப்போனதால், ‘‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். அதில் அஜித்தின் நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது. பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்று ட்வீட் பண்ணினார்.

அதோடு, மூன்று ஆக்‌ஷன் கதைகள் உள்ளன. அதில் ஒன்றுக்கு அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். விரைவில் ஹிந்தி படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன்.’’ என்றும் குறிப்பிட்டுள்ளார் போனிகபூர்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடிக்க 50 கோடி சம்பளம் வாங்கியிருக்கும் அஜித் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ள மற்றுமொரு படத்தில் நடிக்க 55 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி படத்தில் அஜித் நடித்தால் இதைவிட பெரிய சம்பளம் கேட்பார் என்று சொல்லப்படுகிறது.

அஜித் என்ன முடிவெடுப்பார் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.