நேர்கொண்ட பார்வை தமிழ்நாடு உரிமை யாருக்கு?

86

சில வருடங்களுக்கு முன் வெளியான சுட்டகதை, நளனும் நந்தினியும், சமீபத்தில் வெளியான ‘நட்புனா என்னானு தெரியுமா’ ஆகிய படங்களை தயாரித்தவர் ‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ ரவீந்தர் சந்திரசேகரன்.

இவர் ‘யோகி’ பாபு நடிக்கும் ‘கூர்கா’ மற்றும் அமலா பால் நடிக்கும் ‘அதோ அந்த பறவைப் போல’ ஆகிய படங்களின் தமிழக விநியோக உரிமையை வாங்கினார்.

அந்தப்படங்களை வெளியிடுவதற்கு முன்பே, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஐங்கரன்’ படத்தின் தமிழக விநியோக உரிமையையும் வாங்கினார்.

‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார் இனைந்து நடிக்கும் ‘ஐங்கரன்’ படத்தை விஜய்சேதுபதியின் நண்பரான பி.கனேஷ் தயரித்துள்ளார்.

சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்ட ‘ஐங்கரன்’ படத்துக்கு சென்சாரில் ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனை தொடந்து இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தநிலையில் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ரவீந்தர் சந்திரசேகர் வாங்கியுள்ளார்.

இவரது வெளியீட்டில் அடுத்தடுத்து இந்த மூன்று படங்களும் வெளியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டநிலையில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் 45 கோடிக்கு முன்னணி விநியோகஸ்தர்கள் கேட்டநிலையில். இவர் கூடுதல் தொகைக்கு வாங்கிக்கொள்வதாக சொன்னாராம். அதனால் இவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.