வேலைக்காரியை கர்ப்பமாக்கிய எஸ்.ஜே.சூர்யா…

740

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போகாலனி என வெற்றிப்படங்களைக் கொடுத்து ஒரு காலத்தில் முன்னணி இயக்குநராக இருந்தார் செல்வராகவன்.

கஸ்தூரிராஜாவின் மகனுக்கு இவ்வளவு திறமையா என் திரையுலகம் வியக்கும் அளவுக்கு வெற்றிகளைக் குவித்தவர், ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மயக்கம் என்ன என தொடர்ந்து மொக்கப் படங்களைக் கொடுத்ததால் முகவரியை இழந்தார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல், வீட்டில் உட்காரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அவருடைய போதாத காலமோ என்னவோ சிம்புவை வைத்து கான் என்ற படத்தை இயக்கும்நிலைக்கு தள்ளப்பட்டார்.

செல்வராகவனுக்கு இப்படியொரு நிலையா என வருத்தப்படாத வாலிபர்களே இல்லை – அப்போது.

தன்னை வைத்து படம் எடுப்பவர்களை டார்ச்சர் பண்ணுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் சிம்பு, செல்வராகவனையும் விட்டு வைக்கவில்லை.

வழக்கம்போல் ஏழரையை இழுத்தார். அதனால் கான் படத்தை ட்ராப் பண்ணினார் செல்வராகவன்.

‘கான்’ படம் ட்ராப் பண்ணப்பட்டதைத் தொடர்ந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில், எஸ்.ஜே.சூர்யா நடிக்க ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கத் தொடங்கினார்  செல்வராகவன்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ரெஜினா, நந்திதா இருவரும்  நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவுள்ள முதல் பேய் படம் இது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஈ.சி.ஆரில் உள்ள ஒரு பங்களாவில் படமாக்கப்பட்டுள்ளன.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் மனைவி நந்திதா. அவருக்கு முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக கணவருக்குக் ‘கொடுக்க வேண்டியதை’ கொடுக்க முடியாதநிலையில் இருக்கிறார்.

‘அந்த விஷயத்தில்’ அதிக நாட்டம் கொண்ட எஸ்.ஜே.சூர்யாவின் பார்வை வீட்டு வேலைக்காரியான ரெஜினா மீது திரும்புகிறது.

ஒருகட்டத்தில் அவரும் நோக்க, அவளும் ஓகே சொல்ல…. நேரம் கிடைக்கும்போதெல்லாம் உல்லாசமாக இருக்கிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கும் ரெஜினாவுக்குமான கள்ளக்காதலில் வீட்டு வேலைக்காரியான ரெஜினா கர்ப்பமாகிறார்.

கர்ப்பத்தை கலைக்கச் சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதன் காரணமாக ரெஜினா இறந்துபோகிறார்.

இறந்துபோன ரெஜினா, ஆவியாக வந்து எஸ்.ஜே.சூர்யா அண்ட் ஃபேமிலியை பொரட்டி எடுப்பதுதான் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கதை.

எஸ்.ஜே.சூர்யாவுக்கும் ரெஜினாவுக்குமான படுக்கையறை காட்சிகளை ‘ஆங்கிலப்படத்துக்கு’ இணையாக எடுத்திருக்கிறாராம் செல்வராகவன்.

விரைவில் தணிக்கைக்கு செல்ல இருக்கிறது நெஞ்சம் மறப்பதில்லை படம்.

அவர்களின் கத்தரிக்கு தப்புமா? பார்க்கலாம்..