நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு என்ன பிரச்சனை?

850

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை இயக்குநர் கவுதம் மேனன் உடன் இணைந்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் சில வாரங்களுக்கு முன் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதை ஏற்க மறுத்து, ரிவைசிங் என்கிற மறுதணிக்கைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மறுதணிக்கையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதன் பிறகு பட வெளியீட்டு பணிகள் வேகம்பிடித்தன.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் ஜுன் 30-ம் தேதி வெளியாகவிருப்பதாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இன்னொரு பக்கம், ஜூன் 30-ம் தேதி வெளியீட்டிலிருந்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் பின்வாங்கிவிட்டதாக படத்துறையில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

“நெஞ்சம் மறப்பதில்லை படத்தைத் தயாரித்துள்ள கவுதம் மேனன் கடுமையான பண நெருக்கடியில் இருக்கிறார். அவர் வாங்கிய கடனை செட்டில் பண்ணினால்தான் படம் வெளியாகும்.

இந்தப்பிரச்சினை குறித்து, பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் ஜூன் 30-ம் தேதி படம் வெளிவர வாய்ப்பில்லை.” என்று சொல்லப்படுகிறது.