ஜூன் 23-ஆம் தேதி, 400 தியேட்டர்களில், நெஞ்சம் மறப்பதில்லை

614

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ 2013, நவம்பர் மாதம் வெளியானது.

இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் – நெஞ்சம் மறப்பதில்லை.

இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.

1963 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த படம் நெஞ்சம் மறப்பதில்லை.

கல்யாண் குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ், மனோரமா நடித்துள்ள இத்திரைப்படத்தின் தலைப்பைத்தான் தற்போது தான் இயக்கியுள்ள படத்துக்கு சூட்டியுள்ளார் செல்வராகவன் ஏறக்குறைய மூன்றரை வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் என்பதால் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை.

அதோடு, செல்வராகவனும், எஸ்.ஜே.சூர்யாவும் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் என்பதாலும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனஈர்ப்பு கிடைத்திருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் ரெஜினா கெசன்டரா, நந்திதா ஸ்வேதா கதாநாயகிகளாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
கடந்த மாதமே இப்படம் வெளியாகவிருந்தது.

அதனடிப்படையில் தணிக்கைக்கும் அனுப்பப்பட்டது.

தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாகுபலி-2 சுனாமியினால் ஒதுங்கி நின்ற நெஞ்சம் மறப்பதில்லை படத்தை, ஜூன் 23-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்!

ஜூன் 23-ஆம் தேதி அன்று ஜெயம்ரவி நடித்த வனமகன், சிம்பு நடித்த ஏஏஏ படங்கள் வெளியாகவிருப்பதாக தகவல் அடிபடுகின்றன.

சிம்பு நடித்த படம் சொன்ன தேதியில் வெளியானதாக சரித்திரமில்லை. எனவே ஜூன் 23-ஆம் தேதி  அன்று நெஞ்சம் மறப்பதில்லை, வனமகன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவரவாய்ப்புள்ளது.

சுமார் 400 தியேட்டர்களில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிடும் வேகத்தோடு தியேட்டரை புக் பண்ணி வருகின்றனர்.