மானேஜரை நீக்கினார் ‘அட்டகத்தி’ நந்திதா

530

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகனவர் நந்திதா.

தொடர்ந்து, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘நளனும் நந்தினியும்’, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது சீனுராமசாமியின் இயக்கத்தில் ‘இடம்பொருள் ஏவல்’, ராதாமோகன் இயக்கத்தில் ‘உப்புக்கருவாடு’, விமலுக்கு ஜோடியாக ‘அஞ்சல’ மற்றும் ‘மிர்ச்சி’ சிவாவுடன் பெயரிடப்படாத புதிய படம் என பல படங்களில் நடித்து வருகிறார் நந்திதா .

இதுவரை அவரது கால்ஷீட்டை பார்த்துவந்த மானேஜரைதற்போது நீக்கிவிட்டார் நந்திதா.

“தற்போது எனது கால்ஷீட் விவரங்களை எனது பெற்றோரை பார்த்துக்கொள்கின்றனர். எனக்கு என தனியாக மேனேஜர் யாரும் கிடையாது”

என்று மின்னஞ்சலில் தகவல் தெரிவித்திருக்கிறார் நந்திதா.

அதோடு, தனது ஊடகத்தொடர்பாளராக பி.ஆர்.ஓ.யுவராஜை நியமித்திருக்கிறாராம்.