ஆரி, ஆஷ்னா சாவேரி நடிக்கும் ‘நாகேஷ்திரையரங்கம்‘

625

திரையுலகில் கொடி கட்டிப்பறந்த நடிகர் நாகேஷ் பெயரில் “நாகேஷ்திரையரங்கம்” என்ற புதிய திரைப்படம் இன்று தொடங்கியது.

சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரியும், கதாநாயகியாக வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்,  இனிமே இப்படித்தான், மீன்குழம்பும் மண்பானையும்  படங்களில் நடித்த ஆஷ்னா சாவேரியும் நடிக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லதா, சித்தாரா நடிக்கிறார்கள்.

முண்டாசுப்பட்டி, ராஜாமந்திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த காளிவெங்கட் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.

மும்பையை சேர்ந்த மாடல் அழகி மாஷும் இப்படத்தில் முக்கிய  கதாபாத்திரத்தில்  அறிமுகமாகிறார்.

மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்குபெறும் இப்படத்தை இசாக் எழுதி இயக்குகிறார்.

இவர் அகடம் என்ற திரைப்படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம்பெற்ற முதல்தமிழ் இயக்குநர்.

நாகேஷ்திரையரங்கம் படத்தைப் பற்றி இசாக் என்ன சொல்கிறார்…?

“திரையரங்கை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் கதையும் களமும் புதிதாக இருக்கும்.

நகைச்சுவை, காதல், மர்மம் போன்றவற்றை பின்னணியாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக நாகேஷ்திரையரங்கம் மக்களை கவரும்” என்றார்.

ரமணா, அயன், நீதானே என் பொன் வசந்தம் உட்பட பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான எம்.எஸ்.பிரபு இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

இப்படத்தின் பாடல்களை தாமரை, உமாதேவி,  ரோக்கேஷ், முருகன் மந்திரம், மு.ஜெகன்சேட் எழுதுகிறார்கள்.