NIK Studios மற்றும் Abhishek Pictures நிறுவனங்கள் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரை கோலாகலமாக தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நடிகர் விராட் கர்ணா, இயக்குநர் அபிஷேக் நாமா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விராட் கர்ணா,
“கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழு குழுவும் இந்தப் படத்திற்காக இடைவிடாமல் உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்வுக்கு நீங்கள் அளித்த அதே அன்பையும் ஆசீர்வாதத்தையும் எங்கள் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த ரதயாத்திரையின் ஒரு பகுதியாக பல நகரங்களுக்கு பயணம் செய்ய இருக்கிறோம். ரசிகர்கள் எங்கள் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தனது கனவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக என்னைத் தேர்வு செய்த இயக்குநர் அபிஷேக் நாமாவுக்கும், இந்தப் படத்தை முழு நம்பிக்கையுடன் ஆதரித்த தயாரிப்பாளர்கள் நிஷிதா நாகிரெட்டி மற்றும் கிஷோர் அன்னபுரெட்டிக்கும், என்னுடன் நடித்த நபாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் அபிஷேக் நாமா …
” இது வெறும் திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி அல்ல; நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வேர்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு முயற்சி. அந்த பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் இந்த ரதயாத்திரையை நடத்துகிறோம்.
இந்த முயற்சி அனைவரின் மனதையும் தொடும் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் எங்களுக்கு மிகவும் அவசியம்.
இந்த கனவை நனவாக்க உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தத் திட்டம் சாத்தியமாகியிருக்காது.
படப்பிடிப்பின் போது விராட் கர்ணா தனது எல்லைகளைத் தாண்டி கடுமையாக உழைத்தார். உடல்நலப் பிரச்சினைகளையும் மீறி அவர் காட்டிய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. படம் வெளியான பிறகு அவரது திறமையை ரசிகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
நடிகை நபாவுக்கும், இசையமைப்பாளர்கள் ஜுனைத் மற்றும் அபி ஆகியோருக்கும் என் நன்றிகள். அனைவரும் இந்தப் படத்தின் இசையையும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரை மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, அனந்த பத்மநாப சுவாமியின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அந்த சிலை, நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆன்மிக உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
ஆன்மிகப் பாரம்பரியத்தையும், காட்சியமைப்பையும் இணைத்து உருவாகியுள்ள ‘நாகபந்தம்’ திரைப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத்தின் புரமோஷனை வித்தியாசமான முறையில் தொடங்கியுள்ள படக்குழு, நாடு முழுவதும் ரதயாத்திரை மூலம் ரசிகர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.