நான் சிகப்பு மனிதன் படத்துக்காக 30 லட்சத்தில் சர்ச் செட்

609

யுடிவிமோஷன் பிக்சர்ஸ், விஷால் பிலிம் பாக்டரி இணைந்து தயாரித்து வரும் படம் நான் சிகப்பு மனிதன்”.

இதன் படப்பிடிப்பு கடந்து ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

படத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு பாடலை ஜீ.வீ.பிரகாஷ் உருவாக்கி இருக்கிறாராம். வெள்ளை, மஞ்சள், கருப்பு, நீளம், பச்சை என ஐந்து நிறங்களை வைத்து நா.முத்துகுமார் இப்பாடலை எழுதியுள்ளாராம்.

ஏலேலோ மெதப்பு வந்திருச்சி…” என்ற இப்பாடலை ஜீ.வீ.பிரகாஷ் பாடியுள்ளார். இதற்காக முட்டுக்காடு அருகில் கடல் தண்ணீர் சூழ்ந்துள்ள இடத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் சர்ச் செட் போடப்பட்டதாம்.

“பருத்திவீரன்”, “ஆடுகளம்” படங்களுக்கு பணிபுரிந்த ஜாக்கி இதை உருவாக்கியுள்ளார். திடீரென உருவான இந்த ‘சர்ச்’-ஐ பார்க்க அக்கம்பக்கத்து ஊர் மக்கள் கூடிவிட்டார்களாம். எனவே இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்ட பிறகும் செட்டை அகற்றாமல் ‘நியூ இயர்’ வரை வைத்திருக்க தயாரிப்பாளர் விஷால் முடிவு செய்துள்ளாராம்.

பாடலின் ஒரு பகுதியாக வரும் இப்பாடலை ஷோபி நடனம் அமைக்க 250 நடன கலைஞர்களுடன் விஷால், ஜெகன், சுந்தர் நடனம் ஆடினார்கள்.

இந்தப்பாடலின் மற்றொரு பகுதியை இயற்கை சூழ்ந்த இடத்தில் படமாக்குகிறார்கள்.