நாய்கள் ஜாக்கிரதை – விமர்சனம்

1132

நாய்கள் ஜாக்கிரதை என்று தலைப்பு வைத்ததற்கு பதில்  மனிதர்கள் ஜாக்கிரதை என்று தலைப்பு வைத்திருக்கலாம். கதைக்கு பொருத்தமாகவாவது இருந்திருக்கும்.

பெண்களை கடத்திக் கொண்டுபோய்…(என்ன பண்றாங்க?) பணம் பறிக்கும் கும்பலை சிபிராஜ் கை வைக்கப்போய், அவருடைய கர்ப்பிணி மனைவியையே கடத்தல்காரர்கள் அள்ளிக் கொண்டு போய்விட…

நாய் துணையுடன் தன் மனைவியை சிபி எப்படி மீட்கிறார் என்பதுதான் –  நாய்கள் ஜாக்கிரதை.

நாயைப் பற்றிய பில்ட் அப்புக்கும், நாய்க்கும் சிபிக்குமான  ப்ரண்ட்ஷிப்பை சொல்வதற்கும் பாதி படத்தை நாய் பிஸ்கட்டாக நினைத்து வீணடித்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு சொல்ல வந்த பிரதான கதைக்கு வந்து, சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்கப்பட்ட அருந்ததியை மீட்டு வெளியே கொண்டு வருவதற்குள் சிபியைவிட நாம் டயர்டாகிவிடுகிறோம்.

ஷ்…அப்பாடா….