பஞ்சு அருணாசலம் – இளையராஜா கூட்டணியில் – முத்துராமலிங்கம்

636

பஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து  இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகிறார்.

1976, 1986, 1996, 2006 க்கு பிறகு 2016 ஆண்டில் இருவரும் மீண்டும் இணையும் திரைப்படம் –  முத்துராமலிங்கம்.

கவுதம் கார்த்திக் நடிக்கும் இப்படத்தில்  கேத்ரின் தெரேசா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

குளோபல் மீடியா ஒர்க்ஸ் D.விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். இவர் மனோஜ்குமாரிடம் உதவியாளராக இருந்தவர்.

ஒளிப்பதிவு U.K.செந்தில்குமார்.

முத்துராமன், கார்த்திக் நடித்த படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள பஞ்சு அருணாச்சலம் கவுதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம் திரைப்படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

முத்துராமலிங்கம் படத்திற்கு பாடல்கள் எழுதுவதன் மூலம் மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதிய பெருமையைப் பெற்றுள்ளார் பஞ்சு அருணாசலம்