மான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை?

111

‘மாயா’, ‘மாநகரம்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பில், ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மான்ஸ்டர்’.

எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன், அனில் குமார் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தில் எறும்பு, ஈக்குக் கூட தீங்கு நினைக்காத வள்ளலாரின் பக்தராக எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார்.

அப்படிப்பட்டவருடைய வீட்டுக்குள் ஒரு எலி புகுந்து தொல்லை கொடுக்கிறது. அவர் அதனை எப்படி கையாள்கிறார் என்பதுதான் ‘மான்ஸ்டர்’ படத்தின் கதைம்.

அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும்விதமாக காமெடிப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த வாரம் அதாவது 17-5-19 அன்று வெளியாகியுள்ள ‘மான்ஸ்டர்’ படத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளநிலையில் இந்தப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியான மவுஸ்ஹன்ட் படத்தின் காப்பி என்ற தகவலும் அடிபடுகிறது.

மவுஸ்ஹன்ட் படமும் முழுக்க முழுக்க ஒரு எலியை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.