மோகினி – முதன்முறையாக த்ரிஷா  இரட்டை வேடத்தில்..!

2011

த்ரிஷாவின் நடிப்பில் ஜூலை 27 அன்று திரைக்குவர இருக்கும் ஹாரர்  படம் – மோகினி.

விஜய் நடித்த மதுர படத்தை இயக்கிய ஆர். மாதேஷ் இயக்கியுள்ள இப்படத்தின் 80  சதவிகித காட்சிகள் லண்டனில் படமாக்கப் பட்டுள்ளன.

மோகினி படம் பற்றி த்ரிஷா  என்ன சொல்கிறார்?-

நான்  இந்தப்படத்தில்  மோகினி,  வைஷ்ணவி  என்ற  இரண்டு கதாபாத்திரங்களில்  நடித்திருக்கிறேன்.

முதன் முலைறயாக நான்  நடித்துள்ள இரட்டை  வேடம் இதுதான்.  தினம் தினம் காலை எழுந்து செய்தித்தாளை படித்தால்  குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றியே செய்திகள் அதிகமாக உள்ளன.

அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும்.

மோகினி படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம்.

குடும்பத்தோடு அனைவரும்  தியேட்டருக்கு வந்து பார்க்கும் வகையில் இப்படத்தில்  நிறைய விஷயங்கள் உள்ளனது.” என்றார் த்ரிஷா.

இயக்குனர் ஆர். மாதேஷ் என்ன சொல்கிறார்…?

இந்தப் படத்தில்  த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். அவர் நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு  சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில்  நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்

இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும்.

படத்தில் எபிக் ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள்தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் vfx காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது.

இப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தில் சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான சில  விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சியில் வைத்திருக்கிறோம்.

வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும்வகையில் மக்கள் எதிர் பார்க்கும் அத்தனை விஷயங்களும்  இந்தப்படத்தில் உள்ளது.

‘காதலன்’ படத்தில் முக்காலா முக்காபுல்லா பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷுவல் எபெக்ட்ஸ் மக்களை பிரமிக்க வைத்துள்ளது.

அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் உள்ளன.

ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. அதனால் படத்தை பார்க்கும் அனைவரும் படத்தோடு கனெக்ட்டாக  முடியும்.

பூர்ணிமா பாக்யராஜ், யோகி பாபு, சுவாமி நாதன், ஆர்த்தி கணேஷ் மற்றும் சுரேஷ் போன்ற அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதே போன்று படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்கின்றேன்.” என்றார்.

மோகினி படம் பற்றி தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் குமார்….

சிங்கம் 2 தயாரிப்பிற்கு பிறகு பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மோகினி’.

“மோகினி படத்தின் கதையை மாதேஷ் என்னிடம் கூறும்போது போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக ஹாரர் படங்களுக்கு வரவேற்பு கிடைகின்றது. இக்கதை லண்டனில் நடக்கும் நிகழ்வை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் 55 நிமிடங்கள் வரும் காட்சிகளில் விஷுவல் எபெக்ட்ஸ் அருமையாக வந்துள்ளது. த்ரிஷா இப்படத்தின் கதாநாயகியாக உள்ளது மிக பெரிய பலம்.

இப்படத்தின் கதை முழுவதுமே த்ரிஷாவை மையமாக கொண்டே நகரும். படத்தில் பணிபுரிந்த யோகி பாபு மற்றும் சுவாமி நாதனின் காமெடி சிறப்பாக அமைந்துள்ளது மற்றும் அனைத்து கலைஞர்களும் தங்கள் பணிகளை மிக சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

படத்தின் கதையை என்னிடம் கூறியதற்கும் இறுதியாக படத்தை பார்க்கும்போது 10 மடங்கு சிறப்பாக வந்துள்ளது.’ என்றார்.