‘புரியாத புதிர்’ ஆக மாறிய ‘மெல்லிசை’

460

விஜய்சேதுபதி காயத்ரி நடித்த  ‘மெல்லிசை’ திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டு வருடக்கணக்காகிறது.

அதன் பிறகு விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள் எல்லாம் வெளியாகிவிட்டநிலையில் மெல்லிசை  படம் மட்டும் நீண்டகாலமாகவே  முடங்கிக் கிடக்கிறது.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில்,  ‘ரெபெல் ஸ்டுடியோ’ தயாரித்துள்ள இந்தப் படம்  ட்ராப்பாவிட்டதாக படத்துறையில் பரவியது செய்தி.

இந்நிலையில் மெல்லிசை படத்தின் பெயரை  ‘புரியாத புதிர்’  என்று மாற்றம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இதே தலைப்பில் கடந்த 1990 ஆம் ஆண்டு ஒரு படம் வெளியானது.

கன்னட படம் ஒன்றின் ரீமேக்காக கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ‘புரியாத புதிர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது.

ஏற்கனவே வெற்றியடைந்த படங்களின் பெயர்களை புதுப்படங்களுக்கு மீண்டும் சூட்டப்படுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.

இந்தப் பட்டியலில் புரியாத புதிர் படமும் இணைந்துள்ளது.

ஆமா… எதற்காக மெல்லிசை என்ற தலைப்பு மாற்றப்பட்டது?

“சுவாரசியமான திருப்பங்களோடும், எதிர்பாராத திருப்பு முனை காட்சிகளை கொண்டும் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு நிச்சயமாக ‘மெல்லிசை’ போன்ற இதமான தலைப்பு பொருந்தாது என்று கருதினோம்….  விஜய் சேதுபதி போன்ற சிறந்த நட்சத்திர கலைஞரின் திரைப்படத்திற்கு துடிப்பான தலைப்பு தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, நாங்கள் ‘புரியாத புதிர்’ என்ற தலைப்பை தேர்ந்தெடுக்க ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ செளத்ரி சாரை அனுகினோம்… அவர் இந்த தலைப்பை எங்களுக்கு பரந்த மனப்பான்மையோடு வழங்கியது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.  வருகின்ற நவம்பர் மாதத்தில் நாங்கள் எங்களின் ‘புரியாத புதிர்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். இந்த வருடத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் ஏழாவது படமாகவும், எங்கள் நிறுவனத்திற்காக அவர் நடித்திருக்கும் ஐந்தாவது படமாகவும் விளங்கும்   ‘புரியாத புதிர்’  திரைப்படம், நிச்சயமாக இந்த வருடத்திற்கான வெற்றிகரமான நடிகர் என்ற பெயரை விஜய் சேதுபதிக்கு பெற்று தரும்….”

என்கிறார்கள்  புரியாத புதிர் படக்குழுவினர்.