விஜய் நடிக்கும் மாஸ்டர் கொரிய படத்தின் காப்பி?

1436

சமீபத்தில் விஜய்64 படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது.

மாஸ்டர் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் தலையில் கை வைத்தபடி விஜய்யின் தோற்றம் கலங்கலான பிம்பமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் ரசிகர்களையே அவ்வளவாக கவரவில்லை. எனினும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட விஜய் நடிக்கும் படத்துக்கு இப்படியொரு  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இருக்குமா?

இருக்கிறது. படத்தின் கதைப்படி கல்லூரி உதவி பேராசிரியரான ஜேடி (விஜய்) ஒரு குடிகாரர்.

எந்நேரமும் போதையிலேயே இருப்பவர். கல்லூரி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்ய, மைனர் ஜெயில் என்று சொல்லப்படும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு வாத்தியாராக அதாவது மாஸ்டராக வேலைக்கு வருகிறார் விஜய்.

அங்குள்ள 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விஜய்யிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். அவரை அவமானப்படுத்துகின்றனர். அதன் பின்னணியில் இருப்பவர் அர்ஜுன்தாஸ் (கைதி படத்தின் வில்லன்). மைனர் ஜெயிலில் உள்ள சிறுவர்களை வைத்து மிகப்பெரிய குற்றங்களை  அர்ஜுன்தாஸ் செய்து வருவதையும், அவருக்குப் பின்னால் விஜய்சேதுபதி இருப்பதையும் கண்டுபிடிக்கிறார் விஜய்.

மாஸ்டர் படத்தின் கதை யூடியூபில் வெளியானதும் அந்தக்கதை எங்கிருந்து சுடப்பட்டது என்ற தகவலும் மறுநாளே சுடச்சுட வெளியானது.  அதாவது, 2011ல் வெளியான சைலன்ஸ்டு (Silenced) என்ற கொரிய படத்தின் காப்பிதான் மாஸ்டர் படம்.

காதுகேளாதோர், வாய்பேசாதோர் பள்ளிக்கு மாஸ்டராக வருகிறான் ஹீரோ. அங்குள்ள குழந்தைகள் அவனைப் பார்த்து ஆரம்பத்தில் மிரள்கின்றனர். அவனிடம் ஒட்டாமல் ஒருவித மிரட்சியுடன் விலகிச்செல்கின்றனர். அதற்கான காரணம் தெரியாமல் குழம்பும் ஹீரோ ஒருகட்டத்தில் அதற்கான காரணத்தை கண்டறிகிறான். அங்குள்ள காதுகேளாத, வாய்பேசமுடியாத குழந்தைகள் பாலியல் ரீதியாக தொடர்ந்து வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுவருவதை கண்டுபிடிக்கிறான். இதற்குப்பின்னால் இருக்கும் தீயவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை வாங்கிக்கொடுக்கிறான் ஹீரோ.

கொரிய மொழியில் தொகானி (Dokani) என்ற பெயரில் வெளியான இந்தப்படம் தென் கொரியாவில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய திரைப்படம். காதுகேளாத, வாய்பேசமுடியாத குழந்தைகளுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்ததும், அந்நாட்டின் அதிபர் தொகானி படத்தைப் பார்த்துவிட்டு, சட்டத்திருத்தமே கொண்டு வந்தார். அதாவது, இதுபோன்ற குந்தைகளிடம் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு 5 ஆண்டு சிறை என்பதை மாற்றி, வாழ்நாள் சிறை என்ற சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதோடு, அதற்கு தொகானி லா என்றும் பெயர் சூட்டப்பட்டது.

இப்படியாக கொரியாவையே கொதிக்க வைத்த சைலன்ஸ்டு படத்தின் கதையைத்தான் கொஞ்சம் மாத்தி பட்டி டிங்கர் பார்த்து மாஸ்டராக்கியிருக்கிறார்கள்.

காதுகேளாதோர், வாய்பேசாதோர் பள்ளியை சிறுவர் சீர்திருத்த பள்ளியாக மாற்றி இருக்கிறார்கள்