மாசு என்கிற மாசிலாமணி – விமர்சனம் Comments Off on மாசு என்கிற மாசிலாமணி – விமர்சனம்

ஆவிகள் இல்லையடி பாப்பா என்று சொல்ல வேண்டிய தமிழ்சினிமா  சமீபகாலமாக ஆவி போதனை நடத்தி வருகின்றன.

அந்த வரிசையில் மற்றொரு ஆவிகள் ராஜ்யம்… மாசு என்கிற மாசிலாமணி.

சின்ன மற்றும் பெரிய திருட்டுக்களைச் செய்யும் மாஸ், ஒரு விபத்தில் மரணத்தின் வாசலைத் தொட்டுத் திரும்புகிறான்.

விபத்திலிருந்து மீண்ட அவனுக்கு  ஆவிகள் எல்லாம்  கண்களுக்குப் புலப்படுகின்றன.

அவற்றைக் கண்டு முதலில் மிரண்டு ஓடும் மாஸ், பிறகு ஆவிகளுடன் கூட்டணி போட்டு  பணம் சம்பாதிக்கிறான்.

வீடுகளில் புகுந்து ஆவிகள் கலாய்க்க வேண்டும், பேய்விரட்டுகிறேன் பேர்வழி என்று அங்கே ஆஜராகி… பேய்களை விரட்டிவிட்டு லட்சக்கணக்கில் பில்லைப் போடுவான் மாஸ்.

பதிலுக்கு ஆவிகளின் ஆசையை அவன் நிறைவேற்றி வைக்க வேண்டும் – என்பது டீல்.

அவனது கூட்டணியில் இல்லாத புதிய ஆவி ஒன்று என்ட்ரியாகிறது. அது அச்சு அசலாக மாஸ் போலவே இருக்கிறது.

அதன் முன்கதையில் தன் அப்பாதான் அது என்று  தெரிந்து கொள்ளும் மாஸ், தன் குடும்பத்தை கொன்ற வில்லன்களைப் போட்டுத்தள்ளுவதுதான் பாக்கி கதை.

மாஸ் மற்றும் சக்தி என்ற ஈழத்தமிழராக சூர்யா.

மாஸ் அதிரடி என்றால் சக்தி சாந்தம்.  விளையாடி இருக்கிறார் சூர்யா.

படத்தில் கதாநாயகி என்று ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக…நயன்தாரா. ப்ளாஷ்பேக் கதாநாயகியாக..ப்ரணிதா.

வெங்கட்பிரபுவின் தம்பியாக பிறந்த ஒரே காரணத்துக்காக இந்தப் படத்தில் ப்ரேம் பை ப்ரேம் இருக்கிறார் பிரேம்ஜி. என்ன கொடுமை சார் இது?

கோஸ்ட் டவுன் (Ghost Town) என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. பார்க்காதவர்களுக்கு மகிழ்ச்சி.

 

 

 

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
நட்சத்திர ஹோட்டலில் அஞ்சலியை ‘சந்தித்தாரா’ சிவகார்த்திகேயன்? – நடந்தது என்ன?

Close