அப்பாடக்கரு இயக்குநரை அசிங்கப்படுத்திய மகன்!

1791

பெரிய இடத்து சமாச்சாரங்கள் பெரும்பாலும் கூவத்தைவிட நாத்தமெடுக்கும்..!

நாம் சொல்லப்போகும் விஷயமும் கூட இந்த ரகம்தான் என்று நீங்கள் சொன்னால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல..

பாரதிராஜாவுக்கும் அவரது மகன் மனோஜுக்கும் பல வருடங்களாகவே குடும்பத்துக்குள் சொத்துத் தகராறு நடக்கிறதாம்.

ஹீரோ, வில்லன், டைரக்டர் என சினிமாவில் மனோஜ் செய்த எந்த முயற்சியும் வொர்க்அவுட்டாகவில்லை என்பதைவிட அவுட்டாகிவிட்டது என்பதே சரி.

எனவே வேறு ஏதாவது பிசினஸ் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்.

அதற்கு டப்பு வேணுமே? மலையாள மாமனார் வீட்டிலிருந்தும் கறக்க முடியவில்லை.

எனவே தன் அப்பா சேர்த்து வைத்திருக்கும் குறிப்பிட்ட சொத்துகளை குறிவைத்து, அவற்றை எல்லாம் தன் பெயருக்கு எழுதித்தரும்படி கேட்டாராம் மனோஜ். அதற்கு பாரதிராஜா மறுத்துவிட்டாராம்.

இது நடந்து பல மாதங்களாகிவிட்டநிலையில், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன் அப்பாவை பகிரங்கமாகவே அசிங்கப்படுத்தி வருகிறாராம் மனோஜ்.

இவ்விஷயம் பாரதிராஜாவுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

இந்நிலையில், மாமனாரின் இன்பவெறியை மையமாக வைத்து பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி என்ற படம் அண்மையில், ஒருவிழாவில் திரையிடப்பட்டது.

அப்போது, ”என் அப்பாவோட அதர் வெர்ஷன் இந்தப்படம்” என்று தன் நண்பர்கள் மத்தியில் ஜாலியாய் மனோஜ் கமெண்ட் அடித்திருக்கிறார். அதாவது என் அப்பாவின் மறுபக்கம் இது என்று சொல்லி இருக்கிறார்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டட பாரதிராஜாவின் அபிமானிகள் சிலர், ‘என்னதான் தன் அப்பா மீது மனோஜுக்குக் கோபம் இருந்தாலும், இப்படியா பொதுஇடத்தில் வைத்து தன் அப்பாவை அசிங்கப்படுத்துவது’ என்று வருத்தப்பட்டு இருக்கின்றனர்.

பெத்த அப்பனைப் பத்தி மவனே கவலைப்படாதப்ப மத்தவங்க வருத்தப்பட்டு என்னாகப்போவுது?