மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன்…

24

ஜீ 5 இல் வெளிவந்து ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் ராதாமோகனின் இயக்கத்தில் உருவான மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படத்தில் நடித்து உள்ள கருணாகரன் தன் கதாபாத்திரத்துக்கு கிடைத்து வரும் நற்பெயரால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்.

“இயக்குனர் ராதா மோகனுடன் பணியாற்றுவது எப்போதும் ஒரு உன்னதமான அனுபவம்.

உப்பு கருவாடு படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகபடுத்திய அவருக்கு நான் என்றென்றும் கடமை பட்டு இருக்கிறேன்.

குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து மகிழக் கூடிய ஜனரஞ்சகமான படைப்புகள் தருவதில் அவருக்கு நிகர் அவரே.

மலேசியா to அம்னீஷியா படத்தில் கூட அவரது கைவண்ணம் நிரவி இருக்கும்.

மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு இந்த படம் ஒரு பெரிய மாற்று மருந்தாக இருக்கும்.

இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்டு உள்ள அற்புதமான படமாகும். வைபவ், வாணி போஜன், எம்.எஸ் பாஸ்கர், மயில் சாமி, ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம். மறக்க முடியாதது.” என்று உற்சாகம் குறையாத உவகையுடன் கூறினார் கருணாகரன்.

மே 28 முதல் ஜீ 5 இல் வெளியான மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.