ஆவணப்படம் இயக்கும் ஜோதிகா…

463

திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு குட்பை சொன்ன ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் நடித்தார்.

36 வயதினிலே படத்தின் வெற்றியை தொடர்ந்து   ஜோதிகா அடுத்து  நடிக்கும் திரைப்படம் “மகளிர் மட்டும்”.

தேசிய விருது பெற்ற  “ குற்றம் கடிதல் ”  படத்தை  இயக்கிய  பிரம்மா  இப்படத்தை இயக்குகிறார்.

மகளிர் மட்டும்   படத்தில் ஜோதிகா உடன்  நடிகை ஊர்வசி , பானு ப்ரியா, மற்றும் சரண்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இணை தயாரிப்பு க்ரிஸ் பிக்சர்ஸ்.

ஜோதிகா இப்படத்தில் ஆவணப்பட இயக்குநராக நடிக்கிறார்.

நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக இருக்கிறது.

கமல் தயாரித்த மகளிர் மட்டும் படத்தில் நடித்த ஊர்வசி, நாசர் இருவரும் இந்தப்படத்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் மட்டும் என்ற டைட்டிலை தன் மனைவி நடிக்கும் படத்துக்கு விட்டுக் கொடுத்த கமலுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சூர்யா.