எம்.ஜி.ஆர் பெயரை வச்ச படத்துக்கு வந்த நிலமையைப் பார்த்தீங்களா?

894

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் ரிலீஸுக்கு தயராகி இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அப்படத்தின் தயாரிப்பாளர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால், இத்தனை காலமாக ரிலீஸாகாமல் முடங்கிக் கிடந்தது.

கடந்த வருடம் மத கஜ ராஜா படத்தை வெளியிட விஷால் முயற்சி செய்தார்.

கடன்காரர்கள் கடைசி நேரத்தில் கட்டையைப் போட்டதால் மீண்டும் பரணுக்குப்போனது மத கஜ ராஜா.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக  நாளிதழ்களில் ரிலீஸ் தேதியுடன் ‘மத கஜ ராஜா’ விளம்பரங்கள் வெளியாகின.

எனவே இந்தமுறை மத கஜ ராஜா படம் உறுதியாக வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மத கஜ ராஜா’ கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்திற்கு மீண்டும் ரிலீஸ் தேதி அறிவித்தனர்.

அதாவது வரும் 13ஆம் தேதி ‘மத கஜ ராஜா’ வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

தற்போது கிடைத்துள்ள தகவலின் ‘மதகஜராஜா’ 13-ஆம் தேதியும் வெளியாகாது என்று சொல்லப்படுகிறது.

அதனால் விஷாலின் ‘மருது’ படத்தை இந்த மாதம் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்!

எம்.ஜி.ஆர் பெயரை வச்ச படத்துக்கு வந்த நிலமையைப் பார்த்தீங்களா?