5 நாட்களில் மாயா படத்தின் வசூல் 15 கோடி…!

673

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக, நயன்தாரா நடிப்பில் கடந்த 17ஆம் தேதி வெளியான படம் – ‘மாயா’.

அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த ஹாரர் படத்திற்கு அனைத்துத்தரப்பு ரசிகர்களிடத்திலும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆரி, அம்ஜத், மைம் கோபி, ஷரத், ரேஷ்மி மேனன், லக்ஷ்மி ப்ரியா, ரோபோ ஷங்கர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் நயன்தாராவை வைத்தே மாயா படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது.

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடமிருந்து மாயா படத்தை வாங்கிய ஸ்ரீதேனானண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் 250 திரையரங்குகளுக்கும் மேல் வெளியிட்டது.

செப்டம்பர் 17 தொடங்கி 22 வரையிலான 5 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மட்டும் 6 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது என்கிறார்கள் திரையரங்கு அதிபர்கள்.

தமிழ், தவிர தெலுங்கிலும் வெளியாகி இருக்கிறது மாயா.

அங்கே ‘மயூரி’ என்ற பெயரில் 250 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் தற்போது 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

வெளிநாடுகளிலும் ‘மாயா’ படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மாயா படம் 5 நாட்களில் உலகளவில் இதுவரை15 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

சினிமாக்காரங்களும் பேயை விடமாட்டாங்க….

மக்களும் பேயை விட மாட்டாங்க போலருக்கே…