மீண்டும் சிம்புவுடன் இணையும் யுவன்

124

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் படம் ‘மாநாடு’.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் துவங்க உள்ளது.

இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க உள்ளதாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மாநாடு படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை மாநாடு படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபுவே சமீபத்தில் வெளியிட்டிருந்தார். ஏற்கெனவே சிம்பு நடித்த மன்மதன், வல்லவன், வானம், சிலம்பாட்டம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களுக்கு இசை அமைத்திருந்தார் யுவன் சங்கர் ராஜா.

அதன் பிறகு இப்போது ‘மாநாடு’ படத்தின் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்துள்ளார் யுவன்.

அரசியல் படமாக உருவாகும் ‘மாநாடு’ படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. அதில் ஒன்று முஸ்லீம் இளைஞன் வேடம்.

மாநாடு படத்திற்காக உடல் எடையை குறைக்கும்படி வெங்கட்பிரபு கேட்டுக்கொண்டதால் சமீபத்தில் லண்டன் சென்று தனது எடையை குறைத்து திரும்பியுள்ளார் சிம்பு.

‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை லிசியின் மகளான கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார்.

ஜூன் 25 முதல் ஜூலை 15 மாநாடு படத்தின் படப்பிடிப்பு மலேஷிவில் நடைபெறுகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறுகிறது.