பஞ்சாயத்து தலைவியின் படத்துக்கே பஞ்சாயத்தா? நல்லவேளை.. பறந்தது சமாதானக்கொடி….

663

பிரிவோம் சந்திப்போம் படத்தில் அழகான அம்மா நடிகையாய் முகம்காட்டிய  லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அதன் பிறகு சில பல படங்களில் அம்மா  வேடங்களில் நடித்தார்.

பிறகு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை… மிஷ்கின் போன்ற மேதைகளின் நல்லாசியுடன் திடீரென ஆரோகணம் என்ற படத்தின் மூலம் இயக்குநரானார்.

அதன் பிறகு நெருங்கிவா முத்தமிடாதே என்ற மொக்கப் படத்தை இயக்கிய  லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மூன்றாவது படமாக அம்மணி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை தொடங்கி ஏறக்குறைய இரண்டு வருடங்களாகின்றன.

தயாரிப்பாளர் வெண் கோவிந்தாவுக்கும், லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பஞ்சாயத்தினால் கிடப்பில் போடப்பட்டது அம்மணி.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து வைத்துக் கொண்டிருக்கும் பஞ்சாயத்து தலைவியின் படத்துக்கே பஞ்சாயத்தா?  என்று அதிர்ச்சியடைய வேண்டாம்.

நல்லவேளை.. பறந்துவிட்டது சமாதானக்கொடி….

அம்மணி படத்தை உலகப்படவிழாக்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்…  அவார்டுகளை அள்ளிக் கொண்டு வர வேண்டும் என்பது அம்மணி லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஆசை.

படவிழாக்களுக்கு அனுப்பினால் பைரசி டிவிடி வந்துவிடும்… அப்புறம் வெண்கோவிந்தாவாகிய நான் வெத்து கோவிந்தாவாகிவிடுவேன் என்று பயந்திருக்கிறார் தயாரிப்பாளர்.

இதன் காரணமாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறு, சமீபத்தில்தான் சமரசமாகி இருக்கிறது.

அதையடுத்துத்தான்  அம்மணி  படத்துக்கு விடிவுகாலம் வந்துள்ளது.

57 வயது சாலம்மா, 82 வயது அம்மணி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் உறவை சொல்லும் கதையாம் – அம்மணி.

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் சாலம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அம்மணி கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார்?

வடிவுக்கரசிக்கு வெள்ளை பெயிண்ட் அடித்ததுபோல் இருக்கிறாரே?

விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் த்ரிஷாவின் பாட்டியாக நடித்த சுப்புலக்‌ஷ்மி என்ற பாட்டிதான் அம்மணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ( அவரை பாட்டி என்று அழைக்கக் கூடாதாம். அக்கா என்று அழைக்க வேண்டும் என்று கண்டிஷன் எல்லாம் போடுவாராம். நேரத்தைப் பாருங்க)

அம்மணி படத்தை அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதா சொல்கிறார் தயாரிப்பாளர் வெண் கோவிந்தா!

தமிழகம் முழுக்க அவரே வெளியிடுகிறார்.

‘‘அம்மணி’ என்ற தலைப்பை வைத்து இது பெண்களுக்கான படம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம. இது அனைவருக்குமான படம்’’ என்கிறார் இப்படத்தின்  இயக்குநரான லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

அம்மணி படத்தில் ஹைலைட் என்ன தெரியுமா?

ரோபோ சங்கர்  ஆடுகிற ஒரு ஐட்டம் டான்ஸ்.