தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் தேவையா இது?

395

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘ஹவுஸ் ஓனர்’.

இந்த படத்தில் 2015 சென்னை வெள்ளப் பேரழிவு சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

இந்தக்காட்சிகளுக்காக பல லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருந்தது. படப்பிடிப்புக்காக கொண்டு வரப்பட்ட தண்ணீரை வீணடிக்காமல் பயிர்களுக்கு பாய்ச்சியதாக சொல்லப்பட்டது.

‘ஹவுஸ் ஓனர்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் ‘கோமாளி’ படத்திலும் இதேபோன்றதொரு வெள்ளப்பேரழிவு காட்சி இடம்பெறுகிறது.

இந்தக்காட்சிகளை சென்னையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் வழியில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் செட் போட்டு படமாக்கியுள்ளனர்.

இந்த செட்டை ஆர்ட் டைரக்டர் உமேஷ் உருவாக்கியுள்ளார்.

இந்த செட்டில் இரவு, பகலாக தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, கே.எஸ்.ரவிக்குமார், வினோதினி ஆகியோர் இந்த வெள்ளக்காட்சியில் நடித்துள்ளனர்.

பல லட்சம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுத்தான் வெள்ளப்பேரழிவு காட்சியின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

ஆனால் படப்பிடிப்பிற்காக பயன்படுத்த தண்ணீர் மறுபயன்பாடு செய்யப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் தண்ணீரை இப்படி விரயம் செய்யலாமா?