ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்த பார்த்திபன்…

510

தன்னுடைய குருநாதர் கே பாக்யராஜை கௌரவிக்கும் வகையில் ‘சாதனை சல்யூட்’ விழாவை சென்னையில் உள்ள ‘இமேஜ் உள் அரங்கத்தில்’ நடத்தினார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் .

பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற ‘சாதனை சல்யூட் விழாவில் இயக்குநர் பாரதி ராஜா, கே பாக்யராஜ் – பூர்ணிமா பாக்யராஜ், எஸ் ஏ சந்திரசேகர், இயக்குநர் ஷங்கர், பிரபு, நாசர், சிவகுமார், எஸ் பி பாலசுப்பிரமணியம், விஷால், கார்த்தி, சாந்தனு, கீர்த்தனா, மன்சூர் அலிகான், இயக்குநர் விஜய், கரு பழனியப்பன், நெப்போலியன், கே எஸ் ரவிக்குமார், விக்ரமன், பி வாசு, லிங்குசாமி, கங்கை அமரன், பாண்டியராஜன், மோகன் ராஜா, கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமரசாமி, சுந்தர் சி உட்பட தமிழ் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தன்னுடைய குருநாதருக்கு சல்யூட் வைத்த இந்த விழாவிலேயே தன்னுடைய இயக்கத்தில், சாந்தனு – பார்வதி நாயர் நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பாடல்களையும் வெளியிட்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

விழாவில் பேசிய ராதாகிருஷ்ணன் பார்த்திபன்,

“என் வாழ் நாள் முழுவதும் என்னுடைய குரு கே பாக்யராஜ் அவர்களுக்கு நான் கடமை பட்டிருக்கிறேன்…. அவருடைய மகன் சாந்தனுவுக்கு, தமிழ் திரையுலகில் வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வர கூடிய எல்லா சிறப்பம்சங்களும் இருக்கின்றது…. கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படம் அதை உறுதி செய்யும். என்னுடைய குருநாதரின் இயக்கத்தில் நான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு….. அது இப்போது நிறைவேறி இருக்கிறது….. நான் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர் பாக்கியராஜ் சார்….. கதாநாயகன் அவருடைய மகன் சாந்தனு…..” என்று குறிப்பிட்டார்.

“என்னிடம் பணி புரிந்த, பணி புரிந்து கொண்டிருக்கின்ற உதவியாளர்கள் இந்த விழாவில் இருக்கின்றார்கள்…..அதற்கும் மேலாக, என்னுடைய குருநாதர், எங்க இயக்குநர் பாரதி ராஜா சார் இங்கு என்னோடு இருக்கிறார்கள்…..இதைவிட என் வாழ்நாளில் மகிழ்ச்சிகரமான நாள் இருக்க முடியாது….”

என்று மகிழ்ச்சியோடு பேசினார் கே பாக்யராஜ்.