இந்த வார படங்களால் வெறிச்சோடிய தியேட்டர்களில் கிடாரி..

1450

‘வெற்றிவேல்’ படத்தைத் தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிடாரி’.

பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தை அடுத்து சசிகுமார் தயாரித்திருக்கும் படம் இது.

புதுமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நிகிலா விமல் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வெற்றிவேல் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் இவர்.

மற்றும் சுஜா வருணீ, நெப்போலியன், வேல ராமமூர்த்தி உட்பட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு. தர்புக சிவா இசையமைத்திருக்கிறார்.

ரேடியோ மிர்ச்சியில்  ஆர்ஜேவாக பணியாற்றிய இவர் ராஜதந்திரம் என்ற படத்தில் நடிகராகவும் முகம் காட்டினார்.

இப்படத்தின் மூலம் தற்போது இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

கோவில்பட்டி மற்றும் சாத்தூர் பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட கிடாரி படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கிடாரி படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து, நேற்று தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர்  ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தணிக்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து கிடாரி படம் செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது.

இதை படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான  சசிகுமார்  அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த வாரம் வெளியான பயம் ஒரு பயணம், மீண்டும் ஒரு காதல் கதை, 54321 ஆகிய படங்களை திரையிட்ட தியேட்டர்கள் ஒரே நாளில் காலியாகிவிட்டன.

அதோடு, கிடாரி வெளியாகும் தினத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை.

எனவே, அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகிறது – கிடாரி.