‘கேக்காமலே கேட்கும்’ – மொபைல்போன் வழியே வரும் பேய்…

1673

கன்னடத்தில் நான்கு படங்களை இயக்கியவர் நரேந்திர பாபு.

அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேக்காமலே கேட்கும்’.

சி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் கிரண் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக திவ்யா, வந்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மஞ்சுநாத், பிரார்த்தானா என்.பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளதாக சொல்லப்படும் இந்த படத்திற்கு கிரிதர் திவான் இசை அமைத்துள்ளார்.

‘கேக்காமலே கேட்கும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவின்போது இயக்குநர் நரேந்திர பாபு…

‘‘கன்னடத்தில் 4 படங்களை இயக்கியிருக்கிறேன். ஐந்தாவது படமாக ‘கேக்காமலே கேட்கும்’ படத்தை தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் இயக்கியிருக்கிறேன்.

சமீபகாலத்தில் நிறைய பேய் படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இந்த படம் இருக்கும்.

இதில் இதுவரை யாரும் கையாளாத ஒரு விஷயத்தை கையாண்டிருக்கிறேன்.

இன்று அனைவர் கையிலும் இருக்கும் ஒரு பொருள் மொபைல் ஃபோன். அந்த மொபைல் ஃபோனை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறேன்.’’ என்றார்.

தன்னுடைய பேச்சில் என் தாய் மொழி தமிழ் என்று சொன்ன இயக்குநர் நரேந்திர பாபு, கே.பாலச்சந்தர் இயக்கிய சில சீரியல்கள், படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளேன் என்றும் சொன்னார்.

அவரது பேச்சைக் கேட்டபோது என் தாய் மொழி தமிழ் என்று அவர் சொன்னதை நம்ப முடியவில்லை.

பாடல்காட்சி மற்றும் டிரெய்லரைப் பார்த்தபோது, கே.பாலச்சந்தர் இயக்கிய சில சீரியல்கள், படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளேன் என்று சொன்னதையும் நம்ப முடியவில்லை.