இது வேதாளம் சொல்லும் கதை படத்தை வாங்கிய கார்த்திக் சுப்பாராஜ்

20

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் படத்தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’ ‘மேயாத மான்’, மெர்க்குரி’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்தது.

அததோடு சில குறும்படங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இரண்டு படங்களை தயாரிக்க இருக்கிறார்.

இந்த இரண்டு படங்களுமே கதாநாயகியின் பாத்திரத்தை மையப்படுத்திய கதை அம்சம் கொண்டவை.

இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை ஈஸ்வர் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.

இந்தப்படத்தில் கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்!

இன்னொரு படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் என்ற புதுமுக இயக்குநர் இயக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

அஸ்வின் காகமனு, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க ரதீந்திரன் ஆர்.பிரசாத் ஏற்கெனவே இயக்கி பாதியோடு நின்றுபோன ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற படத்தைத்தான் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் அண்டர்டேக் பண்ணி படத்தை முடிக்க உள்ளார்.