கார்த்தியைக் கழுவி ஊற்றும் பெண்ணியவாதி

898

ஆண்கள் செய்வதை தானும் செய்வதுதான் புரட்சி, பெண்ணியம், பெண் சுதந்திரம் என்று சில பெண்ணியவாதிகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன் நடிகர் சிம்பு இயற்றி பாடிய பீப் சாங் என்ற ஆபாசப் பாடல் இணையத்தில் வெளியானபோது, பல தரப்பினரும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

பல்வேறு பெண்களை அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிம்புவின் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவையில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிம்பு, அனிருத் இருவர் மீதும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்த புகார்தான் சிம்புவை இன்று தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளி இருக்கிறது.

முன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தை நாட வைத்தது.

கனடா போன அனிருத் சென்னைக்கு திரும்பாமல் அங்கேயே விசிட் விசாவில் தஞ்சம் அடைந்திருப்பதற்கும் கோவை பெண்கள் அமைப்பினரே காரணம்.

இவர்களின் செயல்பாடுகள் இவ்வாறு இருக்க, கொற்றவை என்ற பெண் சிம்பு பீப் ஒலி போட்டு மறைத்த அல்ல, மறைக்க முயன்ற ஆபாசவார்த்தையை வெட்கமில்லாமல் வெளிப்படையாய் உச்சரிக்கிறார்.

பெண்ணுறுப்பைக் குறிக்கும் அந்த வார்த்தையை ஸ்ரீராமஜெயம் எழுதுவதுபோல் தன் கட்டுரையில் வரிக்குவரி எழுதுகிறார்.

இதுதான் சிம்புவுக்கு அவர் காட்டுகிற எதிர்ப்பாம்.

இப்படிப்பட்ட பெண்ணியவாதிக்கு நடிகர் கார்த்தி மீது என்ன கடுப்போ தெரியவில்லை.

தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கழுவி ஊற்றி இருக்கிறார்.

இனி வருவது அவரது பதிவு…

“பெரும்பாலான நடிகர்கள், சினிமாத் துறையினர் ’எப்படிப்பட்ட பெண்களை’ தங்கள் வாழ்க்கைத் துணையாக விரும்புவார்கள் ஆனால் ’எப்படிப்பட்டப் பெண்களை’ சினிமாவுக்காகப் படைப்பார்கள் என்பதை ‘நல்ல கதாநாயகர்’ ஆதரவாளர்கள் பகுத்தாய்வார்களா?

Karthi யிடம் தனக்கு எப்படிப்பட்டப் பெண் மனைவியாக வரவேண்டும் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:
(கேள்வியே தவறானதுதான்)

உங்களுக்கு மனைவியாக வரப்போகிற பெண் மக்குப் பெண்ணாக இருக்க வேண்டுமா? புத்திசாலிப் பெண்ணாக இருக்க வேண்டுமா?

ப: மக்குப் பெண்ணாக இருந்தால்தான் சவுகரியம். புத்திசாலிப் பெண் தேவையில்லை. புத்திசாலிப் பெண் தேவையில்லை. புத்திசாலியாக இருந்தால், கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நான் மட்டுமல்ல, எல்லா ஆண்களுமே இப்படித்தான் விரும்புவார்கள்!

பெண்களுக்கு அறிவு இருப்பது ஆபத்து எனும் இவரது ‘நல்லெண்ணம்’ குறித்து இவர் அறிவிப்பது மட்டுமின்றி தனது ரசிகமணி ஆண்களும் அப்படித்தான் என்று சொல்லி இருக்கிறாரே… நம்மிடம் இத்தனை ‘நியாயம்’ கேட்கும் அந்த ஆண்கள் கார்த்தியிடம் பெண்கள் பற்றிய இதுபோன்ற கருத்துகள் சரியா என்று கேட்பார்களா? தனது ஆணாதிக்க கருத்தியலுக்கு தங்களையும் துணை சேர்த்தைக் கண்டிப்பார்களா?

‪#‎கார்த்தி‬ யின் இக்கருத்து அப்பட்டமான ஆணாதிக்கமில்லையா?

ஒழுக்கம், நல்ல குடும்பத்திற்கு சிறந்த உதாரணம் என்றெல்லாம் இவர்களின் குடும்பதான் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனால்தான் ‪#‎Karthi‬ – ‘குடும்பப் பெண்களுக்கு’ அறிவிருப்பது ஆபத்து என்கிறாரோ?

மற்றவர்களைப் போல இந்தக் ‘குடும்ப கதாநாயகர்களும்’ தங்கள் திரைப்படங்களில் பெண்கள் உடலை ஒரு கவர்ச்சிப் பண்டமாகப் பயன்படுத்திப் பிழைக்கும் செயலில் ஈடுபடுபவர்கள்தானே.. எந்தவிதத்தில் இவர்கள் ஆணாதிக்கத்தைக் களைந்தவர்களாக இருக்கிறார்கள்? நல்லவர்கள் என்ற பட்டத்துக்கு உகந்தவர்களாக இருக்கிறார்கள்?

சமூக சேவை என்பது என்ன? அச்சமூகத்தில் பெண்கள் நலன் அடக்கமில்லையா?

மீண்டும் சொல்கிறேன்: நீர் நிலைகளைத் தூர் வாரும் ‪#‎ActorKarthi‬ சினிமாத் துறையில் நிலவும் ஆணாதிக்கத்தை தூர் வாரவும், கவர்ச்சியின் பெயரால் நிகழும் பாலியல் சுரண்டலைக் களையவும் முன் வர வேண்டும்.”