கனவுக்கொட்டகையின் நூறாண்டு கனவுகள்

562

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கோலாகமாய் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணத்தில், தமிழ் சினிமாவையும், தமிழ் சினிமாக்கலைஞர்களையும் நினைவு கூறி கெளரவிக்கும் வகையில் “நூறாண்டுக்கனவுகள்” எனும் பாடலை “கனவுக்கொட்டகை” படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.

மதன்கார்கியின் வைர வரிகளுக்கு N.R ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பாடலைப்பாடி நடித்திருக்கிறார்.

இரா. செழியனின் ஒளிப்பதிவில், M. பிரபாகரனின் கலைவண்ணத்தில், சிவ. சரவணனின் படத்தொகுப்பில், கனவுக்கொட்டகை படத்தின் இயக்குனர் அர்சில் மூர்த்தி பாடலை இயக்கியிருக்கிறார். தம்பி சிவா நடனம் அமைத்திருக்கிறார். கிரபிக்ஸ் கண்ணன் கேசவன் – மாயா பஜார், மக்கள் தொடர்பு நிகில் முருகன் மற்றும் டிஜிட்டல் தொழிற் நுட்பம் மேற்பார்வை கோபால் பாலாஜி ஆகியோர் செய்திருக்கிறார்கள்.

கனவுக்கொட்டகை படத்தை தயாரிக்கும் ஆர்குச் டாக்கிங் இமேஜஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

இந்த பாடல் தமிழ் சினிமா கலைஞர்களுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் நூற்றாண்டு விழாவுக்கு முன்னர் வெளியிடவிருக்கிறார்கள்.