3 முறையாக இணையும் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான்

11

கமல்ஹாசன் இப்போது நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. ஷங்கர் இயக்கும் இந்த படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் சென்னையில் பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.

பல மாத இழுபறிக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் எழுதி, நடித்து, இயக்க இருக்கும் ‘தலைவன் இருக்கிறான்’ படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனமும், ‘லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

‘தலைவன் இருக்கிறான்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார்.

ஏற்கெனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’, ‘தெனாலி’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைந்திருக்கிறார்.

இந்த படங்களை தொடர்ந்து ‘தலைவன் இருக்கிறான்’ படத்தின் மூலம் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் 19 வருடங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, லைகா தயாரிப்பில் கமல் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட சபாஷ் நாயுடு படத்தை ஏற்கனவே அவர் கிடப்பில் போட்டார்.

பிறகு மீண்டும் அவருடன் லைகா கை கோர்ப்பது எப்படி? இந்தக் கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.

சபாஷ் நாயுடு படத்துக்காக கமலுக்குக் கொடுத்த 40 கோடியை கழித்துக் கொண்டு மீதி தொகையைத்தான் தலைவன் இருக்கின்றான் படத்துக்கு கொடுக்க இருக்கிறதாம் லைகா.