‘பிக்பாஸ்-3’யுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் தேதிகளை ஒதுக்கிய கமல்

107

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா நடிப்பில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் அதாவது, 1996-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ‘இந்தியன்’.

இந்த படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகப்பெரிய காரணமாக அமைத்தது.

23 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்றும் இந்த படத்தை பிரபல ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உலகறிந்த தகவல்.

இந்த வருடம் ஜனவரி மாதம் 18-ஆம் தேதி பூஜையுடன் துவங்கிய ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இப்படம் கைவிடப்பட்டது என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகின!

இந்நிலையில் மீண்டும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.

இப்போது ‘பிக்பாஸ்-3’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் தேதிகளை ஒதுக்கியுள்ளார்.

இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்படநிலையில் தற்போது ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.