அமெரிக்காவில் அந்த 4 நாட்கள்…! – கமல் – கௌதமியை பிரித்த சீனியர் நடிகை

1252


கமல் – கௌதமி பிரிவுக்கான காரணம் பற்றி படத்துறையில் திரும்பியபக்கமெல்லாம் பட்டிமன்றம் நடக்கிறது.

கமலிடமிருந்து கௌதமி பிரிந்து சென்றதற்கு ஸ்ருதிஹாசன்தான் காரணம் என்று அங்கெங்கினாதபடி எங்கும் பேச்சாக இருக்கிறது.

இது பற்றி பல ஊடகங்களில் செய்திகள் வந்த பிறகும் கூட ஸ்ருதிஹாசன் வாயைத்திறக்கவில்லை.

ஊர் பேர் தெரியாத யாரோ ஸ்போக்ஸ்பர்சன் சொன்னதாக நாலு வரி தகவல் ஈமெயிலில் வந்தது.

அதில் கூட ஸ்போக்ஸ்பர்சன் யார் என்ற விவரம் இல்லை.

தன்னுடைய அப்பா கமலுக்கும், தன்னுடைய அப்பாவின் தாலி கட்டாத மனைவி கௌதமிக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் தன்னுடைய பெயர் அடிபடுகிறது என்கிறபோது… ஒன்று தானே விளக்கம் அளிக்க வேண்டும். அல்லது அமைதியாய் இருக்க வேண்டும்.

இந்த இரண்டையும் செய்யாமல் தன்னுடைய சார்பில் தன்னுடைய ஸ்போக்ஸ்பர்சன் மூலம் கருத்து சொல்வதை வைத்தே ஸ்ருதிஹாசன்தான் இத்தனை பிரச்சனைக்கும் மூல காரணமானவர் என்பது புரியாமல் இல்லை.

கமல் – கௌதமி இடையிலான அன்னியோன்ய வாழ்க்கைக்கு வேட்டு வைத்தது ஸ்ருதிஹாசன் என்றாலும், அடியோடு தகர்த்து தரைமட்டமாக்கியது இன்னொரு நடிகை என்ற தகவல் தற்போது வெளி வர ஆரம்பித்திருக்கிறது.

அவர்…….. நீங்கள் நினைப்பதுபோல் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார் அல்ல.

சபாஷ் நாயுடு படத்தில் கமல் உடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்தான் கமல் கௌதமி பிரிவுக்கு காரணகர்த்தா என்கிறார்கள்.

அமெரிக்காவில் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது கௌதமியும் உடனிருந்தார்.

அந்தப் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் என்ற அடிப்படையில் அவர் டிசைன் செய்த டிரஸ்ஸை ஸ்ருதிஹாசன் அணிய மறுத்ததால், கௌதமிக்கும் ஸ்ருதிக்கும் தகராறு ஏற்பட்டது.

ஏற்கனவே கௌதமியை பல வகையில் ஸ்ருதிஹாசன் அவமானப்படுத்தி வந்திருக்கிறார்.

அதை எல்லாம் கமலுக்காக பொறுத்துக் கொண்ட கௌதமியால், அமெரிக்காவில் நடந்த சண்டையை அதாவது ஸ்ருதிஹாசன் தன்னை அவமானப்படுத்தியதை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.

அதைவிட கொடுமை… தன் மகளின் அராஜகத்தை கண்டிக்காமல் கமல் வேடிக்கைப் பார்த்ததை கௌதமியால் ஜீரணிக்க முடியவில்லை.

எனவே சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார்.

கௌதமி சென்னைக்கு கிளம்பிய பிறகு, கமலும், ரம்யா கிருஷ்ணனும் நான்கு நாட்கள் (நான்கு இரவுகள் என்று திருத்தி வாசிக்கவும் ) ஒரே அறையில் தங்கியிருக்கின்றனர்.

அதாவது கமலுடைய அறையில் ரம்யா கிருஷ்ணன் தங்கி இருக்கிறார்.

இந்த விஷயங்கள் மட்டுமின்றி அங்கே  நடைபெற்ற கௌதமிக்கு பிடிக்காத பல சம்பவங்களையும் கௌதமியிடம் அவருடைய  விசுவாசி தொலைபேசி மூலம் போட்டுக் கொடுத்துவிட்டார்.

அதன் பிறகே கமலிடமிருந்து நிரந்தரமாக விலகிவிடும் முடிவை எடுத்தாராம் கௌதமி.

கடந்தகாலங்களில்  கமல்ஹாசன்  தன் மனைவிகளைவிட்டு பிரிவதற்கும் ஒவ்வொருமுறையும்ஒரு நடிகையே காரணமாக இருந்திருக்கிறார்.

இந்த முறையும் அப்படியே…