களவாடிய தலைப்பில் தயாராகும் படம் – “களவு தொழிற்சாலை”

728

திரையுலகை கனவு தொழிற்சாலை என்று சொல்லப்படுவது உண்டு.

அந்தக் கனவு தொழிற்சாலையில் நடைபெற்று வரும் சுரண்டல்களை, திருட்டை அம்பலப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட புத்தகம் – களவுத்தொழிற்சாலை.

ஜெ.பிஸ்மி எழுதிய இப்புத்தகம் நான்காம் பதிப்பாக தற்போது விற்பனையில் உள்ளது.

புத்தகமாக வெளியாகும் முன்பு சினிக்கூத்து இதழில் சுமார் ஓராண்டு பரபரப்பான தொடராக வெளிவந்தது.

ஜெ.பிஸ்மியின் களவு தொழிற்சாலை தலைப்பில் தற்போது ஒரு படம் தயாராகிறது.

எம்.ஜி.கே மூவி மேக்கர் சார்பில் எஸ்.ரவிசங்கர் இப்படத்தை தயாரிக்கிறார்.

“களவு தொழிற்சாலை” படத்தில் வெளுத்துக்கட்டு படத்தில் நடித்த கதிர், ஜெய்ருத்ரா என பெயரை மாற்றிக் கொண்டு கதாநாயகனாக நடிக்கிறார்.

வம்சி கிருஷ்ணா மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக மும்பையை சேர்ந்த குஷி அறிமுகமாகிறார்.

மற்றும் நட்ராஜ்பாண்டியன், செந்தில்,ரேணுகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வி.தியாகராஜன் (இவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உதவியாளர்)

இசை – ஷியாம் பெஞ்சமின் (இவர் ஹாரீஷ் ஜெயராஜிடம் பணியாற்றியவர்)

பாடல்கள் – அண்ணாமலை, நந்தலாலா

படத்தொகுப்பு – யோகாபாஸ்கர்

நடனம் – சங்கர் , சண்டை பயிற்சி – எம்.கே.லீன்

கலை – முரளிராம்

தயாரிப்பு – S. ரவிசங்கர்

கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – T.கிருஷ்ணசாமி

சர்வதேச சிலை கடத்தல்காரன் ஒருவனின் பயணம்தான் இந்த படத்தின் கருவாம்.

கதையின் முக்கிய பகுதி கோவிலின் உள்ளேயும், சுரங்கத்தின் உள்ளேயும் நடைபெறுவதாக உள்ளதால் கோவில்களையும், சுரங்கங்களையும் தேடி அலைந்த பட குழு கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் கிலோமீட்டர் பயணித்து இருகிறார்கள்.

தென்னகத்தில் உள்ள பாழடைந்த புழக்கத்தில் இல்லாத பல சுரங்கங்களை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்த பின்பு அதை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சி குழுவைச்சேர்ந்த சிலருடன் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறிய சில வரலாற்றுக் குறிப்புகளை வைத்து தீவிரமாக அலசி இருநூறு அடி நீளத்திற்கு  சோழர்கால சுரங்கம் செட் அமைக்கப்படிருக்கிறததாம். (நம்புகிற மாதிரி இல்லையே)

200 அடி நீளமுள்ள அந்த சுரங்கத்தில் இரவு, பகல் என்று பத்துக்கும் மேற்ப்பட்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்களாம்.
காற்றும் ஒளியும் புகமுடியாத படி அமைக்கப்பட்ட அந்த சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிப்பதற்குள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் மிக சிரமப்பட்டனராம். (காற்று இல்லைன்னா படப்பிடிப்பு குழுவினர் பரலோகம் போயிருக்கணுமே)

சுரங்கத்தின் நுழைவு வெளிப்பகுதி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதால் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாழடைந்த நிலையில் இருக்கும் ஒரு சாதுக்கள் மண்டபத்தை பல மாதங்களாக அலைந்து தஞ்சை பகுதியில் தேடி கண்டுபிடித்து படமாக்கினார்களாம்.