களவுத் தொழிற்சாலை – பரபரப்பு புத்தகம் படத்துக்கு தலைப்பானது

850

தமிழ்ஸ்கிரீன்.காம் ஆசிரியர் ஜெ.பிஸ்மி எழுதிய புத்தகங்களில் ஒன்று – களவுத்தொழிச்லை.

திரையுலகில் நடைபெறும் சுரண்டல்களை அம்பலப்படுத்தும் களவுத்தொழிற்சாலை சில வருடங்களுக்கு முன் பிரபல வாரப்பத்திரிகை ஒன்றில் தொடராக வெளியானது.

பின்னர் புத்தகமாக வெளியாகி, நான்காவது பதிப்பாக இன்றும் பரபரப்பான விற்பனையில் இருக்கிறது.
தொடராக வெளியானபோதும், புத்தக வடிவம் பெற்றபோதும் திரைப்படத்துறையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது – களவுத்தொழிற்சாலை.

தற்போது களவுத்தொழிற்சாலை என்ற தலைப்பை களவாடி அதே பெயரில் ஒரு படம் தயாராகிறது.

எம்.ஜி.கே மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.ரவிசங்கர் இப்படத்தை தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி டி.கிருஷ்ணசாமி என்பவர் இயக்குகிறார்.

“களவுத் தொழிற்சாலை” படத்தில் ஜெய் ருத்ரா (கதிர்) – வம்சி கிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
கதாநாயகியாக மும்பையை சேர்ந்த குஷி அறிமுகமாகிறார்.

“களவுத் தொழிற்சாலை” படம் பற்றி இயக்குநர் கிருஷ்ணசாமி என்ன சொல்கிறார்?

“இதுவரை வெளிவராத, கடத்தலின் இன்னொரு நிழல் உலகத்தையும், அதன் சர்வதேச தொடர்புகளையும், திரைக்கதையாக்கி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

காதல், சஸ்பென்ஸ், திரில்லர் மூன்றும் திரைக்கதையில் மாறி மாறிப் பயணிக்கிறது.

கதிர் கும்பகோணத்தில் வாழும் ஒரு அப்பாவி இளைஞனாகவும், சந்தர்ப்ப சூழ்நிலையில் சட்டத்தின் பிடியில் குற்றவாளியாக சிக்கி கொள்ளும் இளைஞனாகவும் வாழ்ந்திருக்கிறார்.

திரைக்கதையின் முக்கிய பகுதியில் வரும் கதிர் – குஷி காதல் ஒரு நிறைவான காதலை நிச்சயம் நினைவுபடுத்தும்.

இந்த படத்திற்காக கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கோவிலில் கிட்டதட்ட இரு நூறு அடி நீளத்திற்கு பழமை வாய்ந்த ஒரு செயற்கையாக சுரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப் பட்டது. கதையின் முக்கியப் பகுதி இந்த சுரங்கத்தின் உள்ளே நடைபெறுகிறது,’’ என்கிறார் இயக்குநர்.

அண்ணாமலை, நந்தலாலா பாடல்களை எழுத, ஷியாம் பெஞ்சமின் இசையமைக்கிறார். இவர் ஹாரிஸ் ஜெயராஜிடம் பணியாற்றியவர்.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உதவியாளர் வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜூன் வெளியீடாக வர தயாராகிக் கொண்டிருக்கிறது “களவு தொழிற்சாலை”.

படத்தின் தலைப்புக்கு ஏற்ப இன்னொருத்தரோட தலைப்பையே களவாடிட்டீங்களே டைரடக்கரு..