களவாணி 2 தலைப்பு யாருக்கு சொந்தம்? – தயாரிப்பாளருடன் மல்லுக்கட்டும் இயக்குநர்

870

 

விமல், ஓவியா நடிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் – களவாணி.

மிகப்பெரிய வரவேற்பைப்பெற்று வெற்றியடைந்த ‘களவாணி’ படத்தின் இரண்டம் பாகத்தை இயக்கவிருப்பதாக அறிவித்திருந்தார் சற்குணம்.

கே2 என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியாவே கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் ‘களவாணி’ படத்தைத் தயாரித்த ‘ஷெராலி ஃபிலிம்ஸ்’ பட நிறுவனமும் ‘களவாணி-2’ படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இதில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதோடு, ‘களவாணி-2’ படத்திற்கான படத் தலைப்பின் உரிமையை ஷெராலி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் ‘களவாணி-2’ படத்தின் தலைப்பு யாருக்கு என்ற பிரச்சனை எழுந்துள்ளது!

’களவாணி’ படத்தை தொடர்ந்து ஷெராலி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம் எத்தன்.

சுரேஷ் இயக்கிய இந்த படத்திலும் விமல் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இந்த நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் ‘வதம்’.

இந்த படத்தில் பூனம் கௌர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மதிவாணன் இயக்கி வருகிறார்.

இந்த படம் மே மாதம் வெளியாகும் என்றும் ‘ஷெராலி ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

வதம் படம் வெளியான பிறகு களவாணி- 2 படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தநிலையில், சற்குணம் முந்திக்கொண்டுவிட்டார்.

களவாணி 2 தலைப்பு யாருக்கு சொந்தமாகப்போகிறது? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.