பாலிவுட் ஹீரோ நடிக்கும் “காதல் பைத்தியம்”

575

அம்மா பிலிம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு “காதல் பைத்தியம்” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தின் கதாநாயகனாக ஆதர்ஷ் என்ற நடிகர் தமிழில் அறிமுகம் ஆகிறார்.

இவர் ஹிந்தியில் “ஏ தில் ராம்தா ஜோகி” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக ஜீவிகா நடிக்கிறார்.

இவர் கன்னடத்தில் “பிரம்மா விஷ்ணு மகேஷ்வரா” என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மற்றும் ஆடுகளம் நரேன்,Y.G.மகேந்திரன், பிரியா, ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – B.R. ஜெயன் , இசை – எஸ்.பி.வர்மா

பாடல்கள் – விவேகா, சற்குணராஜ் , கலை – எஸ்.தேவராஜ்

நடனம் – கம்பிராஜு – முரளி , ஸ்டன்ட் – மாஸ்மாதா

தயாரிப்பு – C. தசரதா

இணைத்தயாரிப்பு – J.C.மிதுன், K.F.பரீத்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மாசந்துரு. இவர் கன்னடத்தில் லூஸ்மாதா யோகேஷ், ராகினிதிவேதி நடித்த “பங்காரி” என்ற படத்தை இயக்கியவர்.

“காதல் பைத்தியம்” படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்….

இளம் காதலர்களாக ஆதர்ஷ் – ஜீவிகா இருவரிடையே உருவான காதலுக்கு எந்த விதமான தடையும் உருவாகவில்லை.பெற்றவர்களாலோ, மற்றவர்களாலோ எந்தவித தடையோ ஏற்பட வில்லை. அதனால் இருவருக்குள்ளும் ஒரு சின்ன இடைவெளி ஏற்ப்படுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா என்பதை சுவை படச்சொல்கிறோம்.

கன்னடப் படத்தின் டப்பிங் மாதிரி தெரியுதே…