ஜி.வி.​பிராகாஷ் குமார் நடிக்கும் கடவுள் இருக்கான் குமாரு – மற்றுமொரு முக்கோண காதல் கதை

1248

அம்மா கிரியேசன் டி.சிவா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் கடவுள் இருக்கான் குமாரு.

இப்படத்தில் ​ஜி.வி.​பிராகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அவிகா கோர் நடிக்கிறார் மற்றுமொரு கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிப்பது உறுதியாகியுள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சக்தி சரவணன், கலை வைரபாலன்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு தள தேடுதலில் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநர் பாண்டிச்சேரியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு இடங்களாக கடற்கரை ஓரங்களே தேர்தேடுக்கப்பட்டுள்ளன.

கோவா, பாண்டிச்சேரி மற்றும் விசாகபட்டின்னமே படத்தின் முக்கிய படபிடிப்பு இடங்களாக இருக்கும்.

தெய்வ வாக்கு  சின்ன மாப்ளே  ராசையா அரவிந்தன் போன்ற படங்களை தயாரித்தவர் அம்மா கிரியேஷன்ஸ்

​டி​​.சிவா மீண்டும் மற்றொரு பிரம்மாண்ட படைப்பாக  கடவுள் இருக்கான் குமாரு  படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தை ராஜேஷ் .எம் கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார்.  ‘ சிவா மனசுல சக்தி,  ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன்,   ஆல் இன் ஆல் அழகு ராஜா,  வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க  படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த ராஜேஷ்.எம் மீண்டும் தனக்கே உரித்தான காமெடி , காதல் கலந்து பட்டையை கிளப்ப வருகிறார்.

பயணத்தில் வரும் சந்திப்பு என்றுமே சுகமான நினைவுகள் தான். அப்படி ஒரு பயணத்தில் இரண்டு பெண்களை நாயகன் சந்திக்கிறான்.

நாயகனை ஒருத்தி காதலிக்க , நாயகனோ மற்றொருவளை காதலிக்கிறான் . இதன் முடிவு படுசுவாரஸ்யம் என சொல்கிறார் இயக்குநர் ராஜேஷ்.எம்.

இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார், நாயகியாக பிரபல தெலுங்கு ஹீரோயினான அவீகா கோர் தமிழிலில் அறிமுகமாகிறார்.

மற்றொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

மேலும் தம்பி ராமையா , பிரம்மானந்தம் , ஆர்.ஜே.பாலாஜி , நான் கடவுள் ராஜேந்திரன் , ரோபோ ஷங்கர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ்
​ ​நடிக்கிறார்.

இசை ஜி.வி.பிரகாஷ் குமார் , ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் , தயாரிப்பு :- டி.சிவா . இதன் படபிடிப்பு  மார்ச் முதல் வாரத்தில் சென்னையில் ஆரம்பமாகிறது.