பின்வாங்கிய விநியோகஸ்தர்.. கடுப்பான விக்ரம்

79

கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டநேஷனல்’ நிறுவனம் ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ என்ற விநியோக நிறுவனத்துக்கு ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் ‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தயாரித்தது.

கமல், த்ரிஷா நடித்த தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க, அக்‌ஷரா ஹாசன், நடிகர் நாசர் மகன் அபி ஹாசன் இளம் காதலர்களாக நடித்துள்ளனர்.

மலையாள நடிகை லெனா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.

இப்படம் நேற்று ரிலீசாகி இருக்கிறது.

ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் ‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தயாரித்த கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு பேசியபடி முழுத்தொகையையும் ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ ரவி என்பவர் கொடுக்கவில்லை. அதனால் விக்ரமுக்கு சம்பள பாக்கி செட்டில் செய்யப்படவில்லை.

இன்னொரு பக்கம், கடாரம் கொண்டான்’ படத்தின் புரமோஷனையும் ஒழுங்காக செய்யவில்லையாம்.

அதனால் கடுப்பான விக்ரம் தானே செலவு செய்து கடாரம் கொண்டான்’ படத்துக்கான புரமோஷனை மேற்கொண்டுள்ளார்.