மீண்டும் தள்ளிப் போகிறதா கடாரம் கொண்டான்?

183

கமல்ஹாசன் நடிப்பில் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், அக்‌ஷராஹாசன் கதா நாயகியாகவும் நடிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’.

கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் மே 31-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ள விநியோகஸ்தர். ‘கடாரம் கொண்டான்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்றும் இந்த படத்தை வெளியிடுவதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், சிலநாட்களுக்கு முன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க, ஏப்ரல்-17 அன்று விக்ரம் பிறந்த நாள்! விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு ‘கடாரம் கொண்டான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை.

ஆகவே ‘கடாரம் கொண்டான்’ படம் மே 31-ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 10 நேர் கொண்ட பார்வை படம் மற்றும் காப்பான் படம் வெளியாவக இருப்பதால் ஆகஸ்ட் மாதத்திலும் ‘கடாரம் கொண்டான்’ படம் வெளியாக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.