கபாலி படத்தை பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்…?

1242

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கபாலி படம் இன்று வெளியாகி இருக்கிறது.

படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்…?

சமூக வலை தளங்களில் தென்பட்ட ரசிகர்கள் அடித்த சில கமெண்ட்ஸ் இதோ…

 • நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… கபாலி பாத்திட்டு உயிரோட திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.
 • கபாலி… காலி…
 • கபாலி ரஜினிக்காக பார்க்கலாம் இல்லைனா பார்க்காம கூட இருக்கலாம் தப்பில்ல
 • நெருப்புடா..நெருப்புடா..ன்னு சொல்லிட்டு படத்துல புகை கூட வரலையே….
 • இனிமே பணத்தைத் திருப்பி கொடு’ எபிசோட் ஆரம்பம். திங்கள்கிழமைலேர்ந்து வேடிக்கை பாருங்க.
 • பெட்டர் லக் சூப்பர் ஸ்டார்
 • இந்தாண்டின் பிளாக்பஸ்டர் படம் இது.
 • லிங்கா செம சூப்பர், கோச்சடையான் அதைவிட சூப்பர்.
 • படம் பார்த்து கொண்டிருக்கிறேன், போரடிக்கவில்லை, ரசிகர்கள் மகிழ்ச்சியாக ரசிக்கிறார்கள்.
 • இந்த படம் நல்லாயிருக்குனு சொன்னா அவன் மனசாட்சிக்கு எதிராக இருக்கிறான்.
 • நா வந்துடன்னு சொல்லு நெட்ல, வந்துடன்னு சொல்லு கபாலிடா
 • ரஜினி ஓய்வெடுக்கும் நேரம் வந்துவிட்டது.
 • முதல் 15நிமிடம்: நெருப்புடா
  பர்ஸ்ட் ஹால்ப் : வெறுப்புடா
  இன்டர்வெல் : முறுக்குடா
  செகண்ட் ஹால்ப் முழுவதும் : கடுப்புடா
 • கபாலி மாஸ் ஹிட் 1000 கோடி நிச்சயம்
 • சூப்பர் ஸ்டார் ரிட்டர்ன்ஸ்
 • நவீன திருவிளையாடல் எடுத்தா உலகத்த சுத்தி வர விநாயகர் அப்பா அம்மா சுத்திவர தேவையில்ல கபாலி படத்த பார்த்துட்டு வந்தா போதும் கபாலிடா…
 • கபாலி பீவர் ஓவர்… அடுத்தது சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்
 • இது “சூப்பர் ஸ்டார்” படமல்ல… சூப்பர் படம்
 • ஆண்டையின் கதை முடிப்பான் கபாலி -ரஞ்சித், அந்த ஆண்டையே தானுவும் ரஜினியும் தான் போல.
 • கபாலி படம் சுமார் தான், மகிழ்ச்சி இல்லை, அதிக புரொமோஷன், அதிக எதிர்பார்ப்பு எப்பவும் அபாயம் என்பது நிரூபணமாகிவிட்டது.
 • கபாலி… கோமாளி…
 • படத்துல குமுதவல்லிய காட்டுறதுக்கு ரஞ்சித் பய குடுத்த பில்டப்பு இருக்கே.. கபாலிக்கு தாணு குடுத்த பில்டப்பு தோத்துப்போயிடும்.
 • விமர்சனங்கள் வருகிறதை பார்த்தா கடைசியில் கபாலி படம், கமல் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லிவிடுவாங்க போல.
 • ஏன்மா பொண்டாட்டிய தேடுறது எல்லாம் ஒரு ஸ்டோரியாமா ஏன்மா இப்டி பண்றீங்களேமா.
 • கபாலி ஈரானிய பட தழுவல்
 • எங்க ஊருல ஒரு தியேட்டர்க்காரன் புதுசா கட்டி இருக்கான். கபாலி எடுக்கலை, இன்னும் தியேட்டர் வேலை இருக்குப்பான்னு சொல்லி உஷாரா எஸ்க்கேப் ஆய்ட்டான்.
 • கபாலி என்றொரு இனமுண்டு அதற்கு அஞ்சான் என்றொரு பெயருண்டு
 • சரி சரி அடிச்சிக்காதிங்க…. கபாலி hit தான்
 • கமர்சியல் குப்பைகளுக்கு மத்தியில் கபாலி ரத்தினம்
 • உலகம் முழுவதும் பேசப்படபோகும் கேரக்டர்…. ம்ம்.. டைரக்டர் கபாலி பா.ரஞ்சித்
 • என்னது கபாலி-2 க்கு வேற லீட் குடுத்து இருக்காங்களா?? ஏன் இதுவர ஒடைச்சது பத்தாதா?