முதல் நாள் வசூல் 100 கோடி… இல்லை… 3 நாள் வசூலே 150 கோடிதான்…. – கபாலி பாக்ஸ் ஆபிஸ் காமெடி…

1549

இதுவரை உலகளவிலான இந்திய சினிமாக்களின் வசூலில் பாலிவுட் படங்களே முன்னணியில் இருந்து வந்தன.

சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சுல்தான் ஹிந்தி படம் முதல்நாளில் 70 கோடிகளை குவித்தது.

அதுதான் நேற்றுவரை சாதனையாக பேசப்பட்டு வந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்த கபாலி திரைப்படம், சல்மான்கானின் சுல்தான் பட சாதனையை முறியடித்ததோடு, புதிய சாதனை இலக்கையும் நிர்ணயித்துள்ளதாக சொல்லப்பட்டது.

அதாவது, ‘கபாலி’ திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 100 கோடியை வசூலித்திருக்கிறதாம்.

தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான கபாலி, ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் 750 தியேட்டர்களில் வெளியானது.

கேரளாவில் 306 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 250க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியான கபாலி, இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களில் சுமார் 1000  தியேட்டர்களில் வெளியானதாக சொல்லப்படுகிறது.

இதன் அடிப்படையில், இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 3000 தியேட்டர்களில் கபாலி திரைப்படம் திரையிடப்பட்டதாக புள்ளி விவரம் சொல்கின்றனர்.

இந்தியாவில் மட்டும் ‘கபாலி’ படத்தின் முதல் நாள்  55 கோடியைத் தொட்டிருப்பதாக  ஒரு தகவல் வெளியானது.

என்னது… ஒரே நாளில் 55 கோடியா என்று வாயைப் பிளக்காதீர்கள்.

இதுதான் அந்தக்கணக்கு….

தமிழ்நாடு : 20 கோடி

ஆந்திரா, தெலுங்கானா : 15 கோடி

கேரளா : 4 கோடி

கர்நாடகா : 3 கோடி

வடமாநிலங்கள் : 13 கோடி

இந்திய வசூல் இப்படி என்றால்,  அமெரிக்காவில் திரையிடப்பட்ட பிரீமியர் ஷோவில் 13 கோடி வசூலாகி இருக்கிறது.

இதுவரை எந்தவொரு ஆசிய திரைப்படத்திற்கும் இல்லாத மிகப்பெரிய வசூல் ‘கபாலி’ படத்துக்கு கிடைத்துள்ளதாம்.

முதன்முறையாக மலேசியாவில் மலாய் மொழியிலேயே வெளியிடப்பட்டதால் கபாலி படத்துக்கு கணிசமான வசூல் கிடைத்துள்ளதாம்.

மேற்கண்ட் புள்ளிவிரங்களின்படி கபாலி படம் முதல்நாளில்  100 கோடியை வசூலித்திருக்கிறது என்று சொல்லப்பட்டதற்கு மாறாக,  உலகம் முழுக்க, மூன்று நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக இன்னொரு தரப்பு  புள்ளி விவரங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது.