பாசமலர், கிழக்கு சீமையிலே வரிசையில் காத்தாடி மனசு

kaathadi manasu movie news_

எத்தனையோ சொந்தங்கள் இருந்தாலும், அண்ணன் தங்கை உறவென்பது ரத்தத்தின் உறவு.

அண்ணன், தங்கை உறவை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம்.

பாசமலர், கிழக்கு சீமையிலே வரிசையில் அண்ணன், தங்கை உறவின் பாசப் பிணைப்பை எதார்த்தமாக பதிவு செய்திருக்கும் படம் காத்தாடி மனசு.

அண்ணனாக தம்பி ராமையா, தங்கையாக சுஜாதா இந்தப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். தம்பி ராமையா மகளுக்கும், சுஜாதா மகனுக்கும் ஏற்படும் காதல், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் கிராமத்து காவியம் ‘காத்தாடி மனசு’.

மெளரியா, விஜய்லோகேஷ், யுகா, அனிகா, தம்பிராமையா, கஞ்சா கருப்பு, யுவராணி, கோலிசோடா சுஜாதா, கானாபாலா, சித்ரா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்.எஸ்.மாதவன்.

ஒளிப்பதிவு ஆர்.வேல், இசை ஸ்ரீசாஸ்தா, பாடல்கள் கானாபாலா, சுகுமார், ஞானவேல், ஸ்ரீசாஸ்தா.

எடிட்டிங் சுஜித் சகாதேவ், சண்டை சூப்பர் சுப்புராயன், நடனம் ஸ்ரீதர்.

தயாரிப்பு எஸ்.சேதுராமன்

இணை தயாரிப்பு – ஹெச்.பிரதாப்குமார், பி.எஸ்.ஜெயக்குமார், எஸ்.வேலு.

கம்பம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘காத்தாடி மனசு’ இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்.