காப்பான் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டி.வி.

49

லைகா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘காப்பான்’.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கும் மூன்றாவது படம் இது.

பிரதமர் வேடத்தில் மோகன்லாலும், அவரது பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும், மோகன்லால் உடைய மகனாக ஆர்யாவும் அவரது காதலியாக சாயிஷாவும் நடிக்கும் இப்படம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ரிலீசாகிறது.

பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா, சமுத்திரகனி ஆகியோரும் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ‘சிறிக்கி…’ என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

காப்பான் படம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க பிரபலமான டி.வி. நிறுவனங்களுக்கு இடையில் போட்டி நிலவியது.

இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி. வாங்கியுஙளளது.

இந்த தகவலை அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.