74

சூர்யா நடிப்பில சில வாரங்களுக்கு முன் வெளியான என்.ஜி.கே. படு தோல்வியடைந்தது.

அவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘காப்பான்’.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா உடன், மோகன்லால், சாயிஷா, சமுத்திரக்கனி, ஆர்யா, பொம்மன் இராணி உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘காப்பான்’ படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது.

படத்தில் மோகன்லால் பிரதமராகவும் அவரது மகனாக ஆர்யாவும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

பலத்த பாதுகாப்பையும் மீறி மோகன்லால் கொல்லப்பட பழி சூர்யா மீது விழுகிறது.

அங்கிருந்து தப்பிக்கும் சூர்யா உண்மையான குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் காப்பான் படத்தின் கதையாம்.

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக பணியில் சேருவதற்கு முன் விவசாயியாக இருந்தவர் சூர்யா. அப்போது விவசாயப் போராட்டங்களில் பங்கெடுத்தவர் என்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக சூர்யா சொன்ன கருத்துக்களால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அவர் நடித்த படத்தில் பிரதமரை கொல்வதுபோன்ற காட்சி இருந்தால் என்னாகும்?

காப்பான் இன்னொரு சர்கார் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.