ரேவதியை சிபாரிசு செய்த ஜோதிகா

69

சூர்யாவின் ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்க, ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி இருவரும் ஒரு படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்தனர்.

பெயரிடப்படாமலே படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டனர்.

40 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பை முடிப்பதாக சொன்ன இயக்குநர், குறுகிய காலத்திலேயே அதாவது 35 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

படப்பிடிப்பு முடிந்த கையோடு ‘ஜாக்பாட்’ என்று தலைப்பை சூட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அண்மையில் வெளியிட்டனர்.

இப்படத்தில் ஜோதிகா மாடர்ன் பெண்மணியாகவும், போலீஸ் அதிகாரியாகவும் இரண்டு கெட்-அப்களில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

இந்த படத்தில் ஜோதிகா, ரேவதியுடன் மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், ஜெகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசை அமைக்கும் இந்த படத்தின் டீஸர், டிரைலர் விரைவில் வெளியாகிறது.

பக்கா காமெடி படமான ஜாக்பாட்டில் ரேவதி நடித்துள்ள வேடத்தில் முதலில் கோவை சரளாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்களாம்.

ஜோதிகாதான் ரேவதியை சிபாரிசு செய்தாராம்.