தொடர் தோல்வி… ஜோதிகா எடுத்த முடிவு

82

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ராட்சசி படத்தை அடுத்து ஜோதிகா நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.

இந்த படத்தை சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குனர் J.J.ஃப்ரெட்ரிக் எழுதி இயக்குகிறார்.

இந்த படத்தில் ஜோதிகாவுடன் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘96’ படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

சில தினங்களுக்கு முன் பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது.

இப்படத்தின் டைட்டில் லுக்கில் ஒரு துப்பாக்கி, ஒரு காத்தாடி ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

அதன் அர்த்தம் என்ன?

பொன்மகள் வந்தாள் ஆக்ஷன் படமாம்.

36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி, ராட்சசி என ஜோதிகா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்து வருவதால், ஆக்ஷன் கதையில் நடிக்க முடிவு செய்தாராம் ஜோதிகா.