கபடி ஆடும் ஜீவா, அருள்நிதி

86

விமல், சூரி, அஞ்சலி நடித்த ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கியவர் ராஜசேகர்.

அந்தப்படம் கமர்ஷியலாக தோல்வியடைந்ததால் அடுத்தப்பட வாய்ப்பு கிடைப்பதில் இயக்குநர் ராஜசேகருக்கு தாமதம் ஏற்பட்டது.

நீண்ட முயற்சிக்குப் பிறகு அவருக்குப் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்ன கதை பிடித்துப்போய், ‘ஜித்தன்’ ரமேஷ் படத்தை தயாரிக்க முன்வந்தார்.

‘ஜித்தன்’ ரமேஷ் தயாரிப்பில் ராஜசேகர். இயக்கும் புதிய படத்தில் ஜீவாவும், அருள் நிதியும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி ஏற்று நடிக்கும் கேரக்டர்கள் குறித்து இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டு நண்பர்கள் பற்றிய கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் ஜீவாவும், அருள்நிதியும் கபடி விளையாட்டு வீரர்களாக நடிக்கிறார்கள்.

இந்த படத்தை இயக்கும் ராஜசேகரின் நண்பர்களில் பலர் நிஜத்தில் கபடி விளையாட்டு வீரர்களாம். அந்த நண்பர்களைக் கொண்டே இப்படத்தில் கபடி வீரர்களாக நடிக்கும் ஜீவா, அருள்நிதி இருவருக்கும் கபடி விளையாட பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீஸரை விரைவில் வெளியிட உள்ளனர்.